by admin on | 2025-01-21 04:23 PM
மதிப்பிற்குரிய ஐயா.
நான் குன்னூர் மேட்டுப்பாளையம் பஸ்டேண்டு காந்தி சிலை அருகே ஆட்டோ ஓட்டி வருகிறேன்.
நான் ஆட்டோ ஓட்ட வந்து இரண்டு வருடங்கள் மேல் ஆகிவிட்டது.கடந்த ஒன் றை வருடங்கள் முன்பு ஊட்டி பஸ்டேண்டு மகாத்மா காந்தி ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தேன்.நான் பெண் என்பதால் என்னை ஒதுக்குகிறார்கள்.எனக்கும் என்னுடன் ஆட்டோ ஓட்டி வந்த ஆண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . நான் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன் அதன் பேரில் அவர்களை அழைத்து . காவல் ஆய்வாளர் விசாரித்தார் பிறகு.என்னை அவர்களுடன் வேண்டாம் என்று சக ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியதால் எனக்கு . மேட்டுப்பாளையம் பஸ்டேண்டு காந்தி சிலை அருகே ஆட்டோ நிரூத்த இடம் கொடுத்தார்கள்.அங்கு சரியான வாடகை கிடைப்பதில்லை. அப்படியும் எதோ ஒரு சில வாடகை கிடைத்து ஆட்டோ எடுத்து போய் வருவதற்குள் எனக்கு கொடுத்த இடத்தில் வேறு யாராவது வண்டியை போட்டு விடுகிறார்கள்.நான் எடுக்க சொன்னால் . என்னிடம் சண்டை போடுகிறார்கள். என் ஆட்டோ மறைத்து கார் கள் போட்டு கொள்கிறார்கள். ஓட்டுபட்டரை ஆட்டோ ஓட்டுனர்கள் நான் ஆட்டோ ஓட்டும் இடத்தில் வந்து எனக்கு
கிடைக்கும் ஒரு சில வாடகையும் எடுத்து செல்கின்றார்கள் இதை
கேட்டல் என்னை ஓரு பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள்.
என் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.என் வருமானம் வைத்துதான் என் பிள்ளையின் எதிர்கால மே இருக்கிறது.என் மகளை படிக்க வைக்க தான் ஆட்டோ ஓட்டி வந்தேன். தயவுகூர்ந்து எனக்கு நான் முதலில் ஆட்டோ ஓட்டி வந்த மகாத்மா காந்தி ஆட்டோ ஸ்டேண்டில் எனக்கு ஆட்டோ நிருத்தி ஓட்ட இடம் வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.நான் ஓன்றைவருடங்களாக
ஆட்டோ திருத்த இடம்
கேட்டு இது வரை கிடைக்கவில்லை. பெண் என்றாலே கேவலமாக பார்க்கும் இந்த சமூகத்தில்.எனக்கு உதவயாரும் இல்லை.என் பெண் பிள்ளையை மனதில் கொண்டு எனக்கு உதவிடுமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் . நான் சொல்வது உண்மை .என்பதற்கு தங்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள் அனுப்பி உள்ளேன்.இந்த பதிவிறக்கி செவி சாய்த்து எனக்கு மகாத்மா காந்தி ஆட்டோ ஸ்டேண்டில் இடம் வாங்கி தருமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
இப்படிக்கு
நிஷா
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !