| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விவாதம் செய்வோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்...!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!

by admin on | 2026-11-11 07:59 PM

Share:


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை  விவாதம் செய்வோம் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்...!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!

*கேள்வி-பதில்*


*-- ஆர். வி. ஆர்*



[முந்தைய கேள்வி-பதில் பகுதிகளை இங்கு தட்டிப் படிக்கலாம் --> https://rvr-india.blogspot.com]



*1. கேள்வி:* காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'தேர்தல் கமிஷன் நடத்திய எஸ்.ஐ.ஆர் குறித்துப் பொதுவெளியில் விவாதம் செய்வோம், வாருங்கள்' என்று பிரதமர் மோடியை அழைத்தபடி இருக்கிறார். ஏன் இந்த அழைப்பைப் பிரதமர் ஏற்கவில்லை?


*பதில்:* பார்வையாளர்களை மகிழ்விக்க, சர்க்கஸ் கோமாளிகள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு கோணங்கித்தனம் செய்வார்கள். அரசியல் சர்க்கஸில் பிதற்றலாகப் பேசி வேடிக்கை காட்ட ராகுல் காந்தி எனும் கோமாளி இருக்கிறார். அதில் தனியாகவே அவர் அசத்துவார். இருந்தாலும் அவர் மோடியை இன்னொரு கோமாளியாக நினைத்து, விவாதம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு ஜோடியாக வேடிக்கை காட்ட மோடியை அழைக்கிறார். மோடி கோமாளி அல்ல.


                               *****


*2. கேள்வி:* தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், 85, உடல்நிலை சரியில்லாமல் இருந்து தேறி வருகிறார். அவருடைய மகள், சுப்ரியா சுலே, பாராமதி லோக் சபா தொகுதி எம்.பி-யாக இருப்பவர். சமீபத்தில் சரத் பவாரைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்த பிரதமர் மோடி, "உங்கள் பெண் சுப்ரியா தயாராக இருக்கிறார். நானும் உங்கள் மகளும் தேசத்தைப் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள்" என்று கூறியதாகப் பல பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. சுப்ரியாவுடன் இணைந்து மோடி தேசத்தை என்ன கவனிப்பார்?


*பதில்:* சரத் பவார் மஹாராஷ்டிராவில் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர். 


ஒரு தேசத்தைப் பலவாறாக நிர்வகித்து நாட்டை முன்னேற்றவேண்டும், பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்றால் தேசத்தின் தலைவனிடம் அர்ப்பணிப்பு, திறமை, வீரம், விவேகம், தொலைநோக்குப் பார்வை, சாணக்கியத்தனம் ஆகிய அனைத்து குணங்களும் இருக்க வேண்டும். எந்த குணத்தை எப்போது வெளிப்படுத்தவேண்டும் என்பதையும் அவர் அறிவார்.


                               *****


*3. கேள்வி:* "2029-ம் ஆண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழக்கும்" என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே அண்மையில் பேசி இருக்கிறாரே?


*பதில்:* அடுத்தடுத்து மூன்று லோக் சபா தேர்தல்களில் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜெயித்து, மூன்று முறையும் மோடி பிரதமராகி விட்டாரே, எப்போதாவது  ஒருமுறை அந்தக் கூட்டணி தோற்றுத்தானே ஆகவேண்டும், அது 2029-ல் நடக்கலாமே, என்ற குருட்டு நம்பிக்கையில் அபிஜித் திப்கே பேசியிருப்பார். 


2029 லோக் சபா தேர்தலில் பாஜக கூட்டணி தோற்று மோடி பிரதமர் பதவியிலிருந்து இறங்குவார் என்று அபிஜித் திப்கே சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று: அபிஜித் என்ன ஆடினாலும், 2029-க்கு முன் மோடியைப் பதவியிலிருந்து விரட்ட முடியாது என்று அபிஜித்திற்கு உறைக்க ஆரம்பிக்கிறது. இரண்டு: அடுத்த முப்பது மாதங்களுக்கு அபிஜித் கவலையில்லாமல் போராட்ட வண்டி ஓட்டலாம். 2029-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஜெயித்துவிட்டால், அப்போதைய தலைமைத் தேர்தல் கமிஷனர் பதவி விலகக் கேட்டு அபிஜித் போராட்டம் நடத்தலாம். அத்துடன், 2034 லோக் சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்கும் என்று அவர் பேசலாம். பிரகாஷ் ராஜ் அருகிலிருந்து கைதட்டலாம்.


                               *****


*4.கேள்வி:* மதுரை மத்தியத் தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவிடம், தவெக ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதானார் ஒரு அதிமுக அரசியல் தலைவர். "இந்த ஆட்சியைக் கவிழ்க்க 15 முதல் 30 கோடி ரூபாய் வரை என்னிடம் பேரம் பேசினர்" என்கிறார் முஸ்தபா. அரசியலில் யார் யார் குதிரை பேரம் செய்ய நினைப்பார்கள்?


*பதில்:* தவெக வேட்பாளராக நின்று எம்.எல்.ஏ ஆன ஒருவர் எதிர் அணிக்குத் தாவி அதன் விளைவாக விஜய் தலைமையிலான ஆட்சி பலவீனப்படலாம், அது நிகழ்வதற்கு முயற்சி செய்யப்பட்டது, என்றால் அங்கு குதிரை பேரம் நடந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். எங்கு என்ன நடக்கிறது என நமக்குத் தெரியாது.


எதிர்க் கட்சிகளின் சார்பாக எம்.எல்.ஏ ஆனவர்கள் தங்கள் கட்சிகளை விட்டுத் தவெக பக்கம் சாய்ந்து விஜய் ஆட்சியைப் பலப்படுத்தினால், அங்கு குதிரை பேரம் நடக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். யாருக்கும் விலை போகாத, யாரும் விலைக்கு வாங்க முடியாத, கட்சி மாறுவதால் தங்களுக்காக எந்தப் பயனும் வேண்டாத, தூயவர்கள் அனைவரும் எதிர்க் கட்சிகளில்தான் இருக்கிறார்களா? எங்கு என்ன நடக்கிறது என நமக்குத் தெரியாது.


                                *****


*5. கேள்வி:* தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கொச்சியில் நடத்திய கூட்டத்தில் அபிஜித் திப்கே தேசியக் கொடியைக் கையில் பிடித்தபடியே பேசினார். மூவர்ணக் கொடியின் மீது அவருக்கு அவ்வளவு பற்றா?


*பதில்:* உங்களின் மோசடி நோக்கம் வெற்றி பெற மக்கள் ஆதரவு தேவை என்றால், அந்த மோசடியை மறைக்க நீங்கள் அதற்குப் பளபளக்கும் முலாம் ஏதாவது பூசிவிடலாம். திமுக உபயோகிப்பது, தமிழ் முலாம். ராகுல் காந்தி பயன்படுத்துவது, அரசியலமைப்பு சட்டப் புத்தக முலாம். அபிஜித் கண்டுபிடித்திருப்பது, மூவர்ணக் கொடி முலாம்.


                               *****


பகுதி 153

09.11.2026


                                 --------


R. Veera Raghavan

Advocate, Chennai


Email: veera.rvr@gmail.com

Blog: https://rvr-india.blogspot.com

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment