| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு நேர்ந்த கொடூரம்...!!!

by admin on | 2026-11-09 10:43 AM

Share:


தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு நேர்ந்த கொடூரம்...!!!

தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் (56). பணியாற்றி வருகிறார்


 அல்லிநகரம் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இவர் தனது பணியை முடித்து  தனது வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார். 

அப்போது தேனி சமதர்மபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது 

மது போதையில் இருந்த ஒரு கும்பல் சாலையை மறித்து  பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனை கண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில் குமார் போதை கும்பலிடம் சாலையை மறிக்காதீர்கள் என்று கூறியதை தொடர்ந்து

 செந்தில்குமாருக்கும் மது போதை கும்பலுக்கும்  அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் இளஞர்கள் செய்யும் அடாவடியை தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். 

இதனை பார்த்த இளைஞர் கும்பல்  சிறப்பு சார்பு ஆய்வாளர்  செந்தில்குமாரை தாக்கியுள்ளனர்

இதில் மயக்கம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதல்உதவிக்காக  தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் 

பின்னர் அங்கிருந்து  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து சம்பவம் பகுதிக்கு வந்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கெளதம் சந்தேகப்படும்படியாக அப்பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் கும்பலை தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment