| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!

by admin on | 2026-11-03 08:09 PM

Share:


வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!

*இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய வீரத்தமிழர் மக்கள் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பந்தல் S. ராஜா!*


இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு வருங்கால முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, வீரத்தமிழர் மக்கள் கழகத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பந்தல் S. ராஜா ஆகிய நான் நேரில் சந்தித்து, வருகின்ற *நவம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தேசம் போற்றும் தேசியத் தலைவர், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், தென்னாட்டுத் திலகர் ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினேன்.*

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், நலத்திட்டஉதவிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்கவும் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தோம்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான மாண்புமிகு திரு. K.T. ராஜேந்திரபாலாஜி அவர்கள் தலைமையில், வீரத்தமிழர் மக்கள் கழகத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் மதுரை ஜெயா, மாநில மகளிரணி திட்டக்குழுத் தலைவி இந்திரா உதயகுமார், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் போஸ் கருப்பையா, மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் மாதவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் M.B. ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ஐயா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும், வரலாற்றுப் பெருமையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!

நவம்பர் 18 அன்று அனைவரும் ஒன்றிணைந்து ஐயா வ. உ. சி. அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்!

!ஒற்றுமையான சமூகமே உயர்வான சமூகம்!

பந்தல் S. ராஜா

மாநில பொதுச்செயலாளர்

வீரத்தமிழர் மக்கள் கழகம்

#வஉசிதம்பரம்பிள்ளை #நவம்பர்18 #வீரத்தமிழர்மக்கள்கழகம் #பந்தல்ராஜா #எடப்பாடிபழனிசாமி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment