by admin on | 2026-10-27 12:54 PM
தேக்கம்பட்டி சிறையில் ஒரு அறையில் தங்கியிருந்த கைதிகள் ஒட்டுமொத்தமாக தப்பித்து ஓடியது எப்படி? திட்டமிட்டு தப்பித்துச் சென்ற நிலையில் கைதிகளின் கநடவடிக்கையை கண்காணிக்காதது ஏன்? சிறை அதிகாரிகளிடம் மதுரை சிறைத்துறை டிஐஜி முருகேசன் கிடுக்குப்பிடி விசாரணை...
தேக்கம்பட்டி சிறைச்சாலையில் இருந்து நான்கு காவலர்களை கொடூரமாக தாக்கிவிட்டு ஒரே அறையில் தங்கி இருந்த 17சிறைக்கதிகள் தப்பித்துச் சென்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், போலீசார் அமைத்த தனிப்படையின் மூலம் தப்பித்த சிறை கைதிகளில் 4 நான்கு பேரை போலீசார் பிடித்தனர். இதர கைதிகளையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் தேக்கம்பட்டி சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ள மதுரை சிறைத்துறை டி ஐ ஜி முருகேசன், சிறைத்துறை அதிகாரிகளிடம் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளார்.
அதாவது தப்பிய கைதிகள் ஒரு நாள் திடீரென முடிவெடுத்து ஜெயிலர்களை தாக்கி விட்டு செல்லவில்லை, சிறையில் இருந்து தப்பிக்க பல நாட்கள் திட்டமிட்டு தப்பியுள்ளனர், அப்படி இருக்கையில் சிசிறையில் கைதிகளின் நடவடிக்கையை கண்காணிக்காமல் விட்டது ஏன்? சிறையில் சமைக்க பயன்படுத்திய பெரிய கரண்டிகளை வைத்து போலீசாரை தாக்கி உள்ளனர் இதனை தடுக்காதது ஏன் எனஅடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளார். இதற்கிடையே கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக சிறையில் பணியாற்றிய போலீசார் சிலரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
: மாவட்ட சிறைசாலைக்கு தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கவுதம் மற்றும்
மதுரை டி.ஐ.ஜி அபிநவ் குமார் வருகை தந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
T. முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் 9842337244
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!