by satheesh on | 2026-10-23 02:50 PM
'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் பெண்கள் வளர்ச்சி மாநாடு - அண்ணாமலை சூளுரை ! உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முனைப்பு !!
நாம் விரிவடைந்து கொண்டிருக்கிறோம்; சுருங்கக் கூடாது. கைதட்டுவதற்காகவோ, சமூக வலைதளங்களில் லைக் போடுவதற்காகவோ நாம் இல்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காக நாம் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதை நோக்கி ஒவ்வொரு நகர்வாகவும் நாம் முன்னேறிச் செல்கிறோம். மக்கள் இயக்கமாக ‘We The Leaders' அமைப்பு இருக்கும். நாம் யாருக்கும் பயப்பட மாட்டோம். என் மனசாட்சி என்ன சொல்கிறதோ, அதை எப்போதும் பேசுபவன் நான். தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் எனக்கு தேசியத்தை பற்றி பாடம் எடுக்க வேண்டாம். பல மாநிலங்களில் பணியாற்றியிருக்கிறேன்; பல மாநிலங்களில் வாழ்ந்திருக்கிறேன். இந்தியாவின் ஒற்றுமை என்ன, இறையாண்மை என்ன என்பது எனக்குத் தெரியும். இந்தப் பாடம் எங்களுக்கு வேண்டாம். எங்களுடைய கனவு வேறுமாதிரியான இந்தியா. எல்லா மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கனவு. குஜராத்தும் வளர வேண்டும், தமிழ்நாடும் வளர வேண்டும். இதில் தவறில்லை. கவர்சிகரமான திட்டங்கள் மக்களுக்கு எந்த பயனும் கொடுக்காது. கட்டிமுடிக்கப்பட்ட ஒரு நூலகத்தை திறந்து வைப்பதற்கோ, மேட்டூர் அணையை திறப்பதற்கோ பல கோடி ரூபாய் செலவு செய்வதால் எதுவும் நடக்காது. தமிழ்நாட்டிற்கு தேவை அதெல்லாம் இல்லை, மக்கள் தேவையை எந்த அரசு செய்கிறதோ அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு 10 சதவீத வளர்ச்சி அடைந்தது என்றார்கள்? உலகத்தில் இருக்கும் 6 செல்போனில் ஒரு போன் ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கும் செல்போன். ஆனால் உள்ளூர் பொருளாதரத்தின் நிலை என்ன..? உங்க வீட்டுக்கு வளர்ச்சி வந்ததா..? – பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் ‘We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேச்சு.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!
டிஜிட்டல் அரெஸ்ட் ....மிரட்டல் மகாராஷ்டிராவில் இருவரை அடித்து தூக்கிய தேனி போலீஸ்.....!!!!!