by satheesh on | 2026-10-24 10:06 PM
தேசிய அளவில் இரண்டு விருதுகளை பெற்ற திண்டுக்கல் மாவட்ட வனத்துறை :
இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் தேசிய அளவிலான அங்கீகாரத்துக்கு தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்த தேர்வில் பல்வேறு கட்டங்களாக இந்தியா முழுவதும் உள்ள வனத்துறை உள்ளூர் சமூக குழு சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வன கோட்டம் கன்னிவாடி வளச்சரகம் அலுவலர் குமரேசன் முன்கள வனப் பணியாளர்கள் பல பாதுகாப்பு மற்றும் வேட்டையாடுதல் தடுப்பு என்ற பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் வனவிலங்கு பாதுகாப்பு வேட்டையாடுதல் தடுப்பு மற்றும் மனித வனவிலங்கு மோதலை குறைப்பதில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கன்னிவாடி வனப்பகுதியில் இயற்கையான நீரோடைகளின் தடைகள் ஏற்படுத்தியதை அகற்றியது எட்டு முக்கிய நீரோடைகளின் மேலாக நீரோட்டத்தை மீட்டெடுத்தது யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மூன்று விரைவு நடவடிக்கை குழுக்களை RRT அமைத்தல் 125 முறை யானை விரட்டும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தால் மற்றும் வனப்பகுதியில் ஒட்டிய பாதுகாப்புக்கு உள்ளாகும் இடங்களில் 20 கிலோமீட்டர் நீளத்துக்கு சூரிய சக்தியால் இயங்கும் தொங்கு பேலிகளை அமைத்தல் போன்ற பணிகளில் அவர் முக்கிய பங்காற்றி உள்ளார். அதேபோல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வனத்துறைக்கு உள்ளூர் மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது தேசிய அளவிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் வனக்கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமலை மலைப்பகுதியைச் சேர்ந்த பொன்ருவி சூழல் சுற்றுலா மேலாண்மை குழு சமூக பங்களிப்புடன் கூடிய வன பாதுகாப்பு விருது என்ற பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 19 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில் இரண்டு சூழல் வழிகாட்டிகளும் இடம்பெற்றுள்ளனர் சிறுமலை பல்லுயிர் பூங்கா மற்றும் பொன்னுருவி சூழல் சுற்றுலா பகுதிகளை மேலாண்மை செய்தல் சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்கு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மின் கலன் மூலம் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துதல் நெகிழி பயன்பாட்டை குறைத்தல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேன் சேகரிப்பு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் இக்குழு சிறப்பாக செயல்பட்டு கலந்த எட்டு மாதங்களில் 52 000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை முறையாக நிர்வாகித்து இயற்கை சூழலை பாதுகாப்போம் பொறுப்பான சுற்றுலா நடைமுறைகளையும் இக்குழு ஊக்குவித்து வருவதும் வனத்துறை முன்கள பணியாளர்கள் அர்ப்பணிப்பும் உள்ளூர் மக்களின் பங்களிப்பும் இணைந்ததால் வனவிலங்குகளை பாதுகாப்பதில் மனித வனவிலங்கு மோதலை குறைப்பதிலும் சிறப்பான பலன்களை அடைய முடியும் என்பதற்கு இந்த அங்கீகாரம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்திய அரசின் தேசிய அளவிலான அங்கீகாரத்துக்கு திண்டுக்கல் வனக்கோட்டத்தில் இரு விருதுகள் அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கும் விழா மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!
டிஜிட்டல் அரெஸ்ட் ....மிரட்டல் மகாராஷ்டிராவில் இருவரை அடித்து தூக்கிய தேனி போலீஸ்.....!!!!!