by satheesh on | 2026-10-22 05:46 PM
மாவட்ட வனத்துறை அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா, அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறுமலை வனச்சரக அலுவலர் ரா. சுரேஷ் தலைமையில், திண்டுக்கல் பிரிவு வனவர் இரா. கார்த்திகேயன் மற்றும் வெள்ளோடு பீட் (கூ/பொ) வனக்காப்பாளர் த. மணிகண்டன் ஆகியோர் பொன்மாந்துறை ஆத்துமேடு நால்ரோடு பகுதியில் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன் (28), பூபதிராஜா (23), சவரிமுத்து (23) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில், குடகனாற்றில் இறந்த நிலையில் கிடந்த காட்டுப்பன்றியை எடுத்துச் சென்று, சுத்தம் செய்து துண்டுகளாக்கிச் சமைக்க முயன்றது கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக, சிறுமலை வனச்சரகத்தில் வன உயிரினக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படி, மூன்று நபர்களுக்கும் தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
காட்டுப்பன்றி இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்காணிக்க தவறியது குறிப்பிடத்தக்கது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!