by satheesh on | 2026-10-24 08:07 PM
குமரி மாவட்டத்தில் தவெக நிர்வாகியால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ! வழக்குப்பதிவு - தலை மறைவு -கைதாவாரா?
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் பகுதியை சேர்ந்த பெயர் வெளிவிட விரும்பாத மாணவி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அவரோடு கல்லூரி தோழியாக தவெகவை சார்ந்த விலவூர் பேரூராட்சி நிர்வாகி படித்து வருகிறார். தனது தோழியான தவெக பெண் நிர்வாகியுடன் தக்கலை அருகே பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது காரில் வந்த, குமரி மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர், அவர்களை ஊரில் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். தோழியை அவரது பகுதியில் இறக்கிவிட்ட பின்னர், மாணவியைக் குலசேகரத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். வழியில் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றபோது, மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவி கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அவரை வீட்டின் அருகே இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது தோழியிடம் தெரிவித்ததையடுத்து, இருவரும் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் சமரச முயற்சி மேற்கொள்ளப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தக்கலை போலீசார் புகாரை விசாரித்து, கிறிஸ்டோபர் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!