by satheesh on | 2026-11-03 11:34 AM
வேடசந்தூர் அருகே லாரி டிரைவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3பேர் கைது:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு நல்லமன்னார்கோட்டை மாரம்பாடி பிரிவு பகுதியில் கத்தியை காட்டி லாரி டிரைவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் மேற்பார்வையில் எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 1மணியளவில் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த காரில் இருந்து 4பேர் கையில் வாள் கத்திகளுடன் இறங்கி லாரியை வழிமறித்து டிரைவரை மிரட்டி பணம் கேட்டு கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் பொன்மாந்துரையை சேர்ந்த சிவசூர்யா(24) என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த ஸ்டேனிஸ் (21) எரியோடு நாயக்கனூரை சேர்ந்த முத்துப்பாண்டி (33)என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2வாள் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன 3பேரும் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர் தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!