by admin on | 2026-10-21 12:03 PM
72 குண்டுகள் முழங்க தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவலர் வீரவணக்க நினைவு தினம் அனுசரிப்பு - தேனி மாவட்டம்
தேனி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு....!!!
லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து இன்று தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.சிவகிருஷ்ணமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.S.பிரவீன்கெளதம்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள், வீர மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தார்கள் முன்னிலையில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் மலர்வளையம் வைத்து 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்று வெற்றி பெற்ற காவலர்களுக்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்..
தி முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் . 9842337244
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!
அவன் என் லவ்வர் அப்படித்தான் பேசுவேன் - அட்வைஸ் சொன்ன தந்தை ! அடம் பிடித்த மகள் - கழுத்தைத் திருகிக் கொன்ற கொடூரம் !!
சிறுமியை காதல் வலையில் சிக்க வைத்த கல்லூரி மாணவன் ! ஆத்திரத்தில் இளைஞரை கொன்ற சிறுமியின் தந்தை !!
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!
டிஜிட்டல் அரெஸ்ட் ....மிரட்டல் மகாராஷ்டிராவில் இருவரை அடித்து தூக்கிய தேனி போலீஸ்.....!!!!!