| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

காதலன் உயிரிழந்த சோகம் கல்லூரி மாணவி உயிரிழப்பு....!!!

by admin on | 2026-11-10 02:50 PM

Share:


காதலன் உயிரிழந்த சோகம் கல்லூரி மாணவி உயிரிழப்பு....!!!



காதலன் உயிரிழந்த சோகம்: வீட்டில் உயிரிழந்த கல்லூரி மாணவி - குழித்துறை அருகே பரிதாபம்!

குமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைத்தெருவை சேர்ந்த தொழிலாளி முருகனின் மகள் அமிர்தா கிருஷ்ணன். தக்கலை அருகே தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்த இவர், வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார்.

கேரள மாநிலம் மணக்காட்டை சேர்ந்த அர்ஜூனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் 5 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் சோகத்தில் இருந்த அமிர்தா கிருஷ்ணனும் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார்.டியூஷனுக்கு வந்த மாணவர்கள் இதை அறிந்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். உடலை குழித்துறை அரசு மருத்துவமனை க்கு அனுப்பிய களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment