| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனி போலீஸ் எஸ் எஸ் ஐ கொலை ! நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய் !!

by satheesh on | 2026-11-09 06:18 PM

Share:


தேனி போலீஸ் எஸ் எஸ் ஐ கொலை ! நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய் !!

தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை  - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் !

தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) செந்தில் குமார், தனது பணியை முடித்துவிட்டு சீருடை அணியாமல் (சாதாரண உடையில்) வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பொதுமக்கள் நடமாடும் சாலையில் இளைஞர்கள் கொண்ட கும்பல் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சாலையை விட்டு விலகிச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய SSI செந்தில் குமார், அவர்களின் செயல்களைத் தனது கைபேசியில் வீடியோ எடுக்க முயன்றார். அந்த இளைஞர்களில் ஒருவரைப் பிடிக்க முயன்ற போது, ஒரு நபர் செந்தில் குமாரை தனது முழங்கையால் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த ரோந்துப் படை போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட எஸ்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உயிரிழந்த SSI செந்தில் குமாருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நிவாரணம் அறிவிப்பு:

தேனி மாவட்ட எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் பணியில் இருந்தபோது, சாலையின் குறுக்கே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய நபர்களை கண்டித்துள்ளார். அப்போது அந்த நபர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த எஸ்.எஸ்.ஐ செந்தில் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. செந்தில் குமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. செந்தில் குமாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு 40 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிடுகிறேன் – முதல்வர் விஜய்.


இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment