| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் உயிர் இழப்பு மூன்று பேர் கைது....!!!!

by admin on | 2026-11-09 03:54 PM

Share:


காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் உயிர் இழப்பு மூன்று பேர் கைது....!!!!



தேனி மாவட்டம் - காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் -மூன்று நபர்கள் கைது.


தேனி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த காவல்துறை அலுவலர் ஆவார். 08.11.2026 அன்று இரவு, தனது பணி நேரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பொதுச்சாலையில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்ததைக் கவனித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சாலையில் பயணிப்போருக்கு ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களிடம் சாலையை காலி செய்யுமாறு அறிவுரை வழங்கியதுடன், அவர்களது செயல்பாடுகளைத் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்யவும் முயன்றுள்ளார். அப்போது, இளைஞர் ஒருவரைப் பிடிக்க முயன்றபோது, மற்றொரு நபர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்களைத் தனது முழங்கையால் தாக்கியதில், அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் ரோந்துப் படையினரும் காவல் ஆய்வாளரும் அவரை மீட்டு, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர் உயிரிழந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்களின் இழப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனது பணிநேரத்தை முடித்த பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் கடமையுணர்வுடன் செயல்பட்ட அவரது செயல், காவல்துறைப் பணியின் மீதான அவரது அர்ப்பணிப்பையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும்,இச்சம்பவம் தொடர்பாக விரிவான மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், இவ்வழக்கில் விசாரணை மேற்கொள்ள ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளையும் ஆய்வு செய்தனர். காவல்துறையினரின் துரிதமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் காரணமாக, இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இத்துயரமான இழப்பில் ஒட்டுமொத்த காவல்துறையும் அவர்களுக்குத் துணை நிற்கிறது. உயிரிழந்த காவல் அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment