by satheesh on | 2026-11-10 11:43 AM
இன்ஸ்டா ஆண் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்த பெண் ; நேரில் கண்ட கணவர் எடுத்த விபரீத முடிவு...!!!
நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். தனியார் குக்கர் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனோபி (வயது 34). இவர் #இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சமூக பிரச்னை தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை வெளியே சென்றிருந்த அருணாச்சலம் பிற்பகல் 3 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள அறை ஒன்றில் வனோபி மர்மமான முறையில் இ*றந்து கிடந்ததார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, வனோபியின் கணவர் தனது நான்கு வயது குழந்தையுடன் வீட்டிலிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அருணாச்சலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று இரவு அருணாசலத்தை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, வனோபி இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது. சில நேரங்களில் அவர்களது வீட்டில் வைத்து, வனோபி அவரது ஆண் நண்பர்களுடன் த*காத உ*றவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை நேரில் கண்ட கணவர் அருணாச்சலம், பிற ஆண்களுடன் தகாத உறவில் இருப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு கண்டித்துள்ளார். ஆனாலும், வனோபி தொடர்ந்து பிற ஆண்களுடன் தகாத உ*றவை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வனோபிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த நபர் சென்னையில் இருந்து வனோபியை சந்திக்க அடிக்கடி அவர்களது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால், வனோபிக்கும், அருணாச்சலத்திற்கும் இடையே பலமுறை த*கராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அருணாச்சலம் ஆத்திரத்தில், தனது மனைவியின் க*ழுத்தை நெ*ரித்து கொ**லை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அருணாச்சலத்தை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர் தீபாவளி பண்டிகை நாளில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயையும் தந்தையும் இழந்து தவிக்கும் குழந்தையை பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .
"இன்ஸ்டா" ஆண் நண்பருடன் வீட்டிலேயே உல்லாசம் ! மனைவி கொலை - ஆத்திரத்தில் கணவன் வெறி செயல் !!
தமிழகத்தில் ஒரே நாளில் 11 பேர் கொலை எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்....!!!!
தேனி போலீஸ் எஸ் எஸ் ஐ கொலை ! நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய் !!
காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் உயிர் இழப்பு மூன்று பேர் கைது....!!!!
தேனியில் சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு நேர்ந்த கொடூரம்...!!!