| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மகளின் இறப்பு - மறையாத வடு ! குற்றவாளிக்கு ஜாமீன் - பழிவாங்கிய தந்தை !!

by satheesh on | 2026-11-10 06:47 PM

Share:


மகளின் இறப்பு - மறையாத வடு ! குற்றவாளிக்கு ஜாமீன் - பழிவாங்கிய தந்தை !!

இன்றைய சூழலில் இப்படிப்பட்ட அப்பாக்கள்தான் சரி என்று தோன்றுகிறதா..?

ஒரு தந்தையின் கண்ணீரும்... பழிவாங்கலும்!

ஒரு சிறுமியின் சிரிப்பும், விளையாட்டும் நிறைந்திருந்த அந்த வீடுதான் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரி சாரங்காவைச் சேர்ந்த சங்கரநாராயணனின் உலகம். ஏழாம் வகுப்பு படித்து வந்த கிருஷ்ணப்பிரியாதான் அந்த வீட்டின் ஒரே வெளிச்சம். ஆனால், 2001 பிப்ரவரி 9-ஆம் தேதி வந்த அந்த வெள்ளிக்கிழமை, அந்தக் குடும்பத்தின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊரின் நிம்மதியையும் பறித்துவிட்டது. வழக்கமாக பள்ளியிலிருந்து வீட்டுக்கு வர வேண்டிய நேரம் கடந்தும் மகளைக் காணாததால், அந்தத் தந்தையின் மனதில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து உறவினர்களும் ஊர்க்காரர்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரின் இதயத்தையும் நொறுக்குவதாக இருந்தது. வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரற்றுக் கிடந்தாள் அவர்களின் செல்ல மகள்! போலீஸ் விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த முகமது கோயாதான் இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணம் என்பது தெரியவந்தது. சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அந்தக் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார். மகளை இழந்து நிலைகுலைந்த அந்தத் தந்தை, நீதிமன்றத்தின் மூலம் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், நீதிக்கான கதவுகள் மூடப்பட்டபோது... ஒரு வருடத்திற்குப் பிறகு, 2002 ஜூலை 27-ஆம் தேதி அந்த அதிர்ச்சியூட்டும் செய்தி வந்தது. குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது! தன் மகள் விளையாடி வளர்ந்த அதே தெருக்களில், அவளைக் கொன்றவன் சுதந்திரமாக நடமாடுவதைப் பார்த்த அந்தத் தந்தையின் மனம் கொதித்தது. மகளுக்கு சட்டம் நீதி வழங்கவில்லை என்றால், தானே அவளுக்கான இறுதி நீதியை வழங்குவதாக முடிவெடுத்தார். அவரது கண்களில் பழிவாங்கும் நெருப்பு எரியத் தொடங்கியது. ஒரு தந்தையின் தீர்ப்பு நிறைவேறிய தருணம்... அது ஒரு மாலை நேரம். நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த முகமது கோயாவின் முன்பாக, கையில் துப்பாக்கியுடன் சிங்கம்போல் சீறிப்பாய்ந்து வந்தார் சங்கரநாராயணன். பயத்தில் உறைந்து போன அந்தக் குற்றவாளியின் முன்னால், கண்களில் கண்ணீருடனும் உறுதியான முகத்துடனும் அந்தத் தந்தை நின்றார். "நீ... என் மகளுக்கு என்ன தண்டனையைக் கொடுத்தாயோ, அதே தண்டனைதான் உனக்கும் கிடைக்க வேண்டும்!"எந்தத் தயக்கமும் இல்லாத குரலில் அந்தத் தந்தை தனது முடிவைச் சொன்னார். அடுத்த நொடியே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. கிருஷ்ணப்பிரியாவைக் கொன்ற குற்றவாளி நிலத்தில் சரிந்தான். சட்டத்தின் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக உணர்ந்த ஒரு தந்தை, தனது மகளுக்கான நீதியைத் தன் கைகளிலேயே எடுத்துக்கொண்டார்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment