by satheesh on | 2026-09-17 06:01 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் ATM மையங்களில் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி பணம் திருடிய பெண் கைது! பல மாவட்டங்களில் கைவரிசை காட்டியதாக விசாரணையில் தகவல் – கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி !!*
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ATM மையங்களில் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி, ATM அட்டைகளை மாற்றி மோசடி செய்து வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தன. ATM மையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் உதவி செய்வது போல் நடித்து, அவர்களது ATM அட்டைகளைப் பெற்று பணம் எடுப்பது போல பாசாங்கு செய்து, பின்னர் வேறு ATM அட்டைகளை மாற்றிக் கொடுத்து மோசடி செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர், IPS அவர்கள், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டார். நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையில், வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலைய போலீசார் இணைந்து பல்வேறு CCTV காட்சிகள் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேனி மாவட்டம் ராஜகோபாலன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மனைவி மணிமேகலை (29), ATM மோசடி தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வடசேரி காவல் நிலைய போலீசார் மணிமேகலையை கைது செய்து, மேலும் தொடர்புடைய மோசடி வழக்குகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் ATM மையங்களில் அந்நியர்களிடம் தங்களது ATM அட்டைகளை ஒப்படைக்காமல், பணம் எடுக்கும் போது விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!