by satheesh on | 2026-09-06 03:36 PM
விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்கப்பட்ட வழக்கில் குழந்தைகளின் தாய் சிவகாமி (24)மற்றும் அவருடைய கள்ளக்காதலன் ராஜா(34) ஆகியோர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.bதகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் சிறுவர்களின் அழுகிய நிலையில் இருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் வெளிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (35). இவரது மனைவி சிவகாமி (24). இவர்களுக்கு திருமணம் முடிந்து பிரேம்குமார் (5 வயது),பிரதாப் (2 வயது) இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். இந்நிலையில் சேட்டு கடந்த 6 மாதத்திற்கு முன்பு செம்மர கட்டை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆந்திரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக சிவகாமிக்கு மாமியார் வீட்டில் உரிய மரியாதை கிடைக்காததால் விரக்தி அடைந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கேயும் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை.bஅப்போது அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் ராஜா(34).இவருக்கு திருமணமாகி1 பெண், 2 ஆண் குழந்தைகள் என 3 குழந்தைகள் உள்ளன.சிவகாமிக்கு ராஜா உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக கடந்த 6 மாதங்களாக தனிமையில் இருந்து வந்த சிவகாமி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கணவருக்கு பிறந்த இரண்டு மகன்களை என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலையில் 2 மகன்களை ஜமுனாமத்தூரில் இருந்து பேருந்தில் ஆலங்காயம் அழைத்து வந்து, அவர்களுக்கு பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடையில் டீ மற்றும் பிஸ்கெட் வாங்கி கொடுத்து பின்னர் பெத்தூர் பகுதிக்கு அழைத்து சென்று அங்கே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பிரேம்குமார் (5 வயது),பிரதாப் (2 வயது) ஆகிய இரண்டு பேரையும் தூக்கி வீசிவிட்டு அங்கே இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.பின்னர் இரண்டு மூன்று தினங்களாக இங்கேயும் அங்கேயும் அலைந்த பின்னர் இதுகுறித்து கள்ளக்காதலன் ராஜாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜா, சிவகாமிக்கு மூன்று நாட்கள் தனிமையில் வைத்து பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், தனிப்பட போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதை அறிந்து சிவகாமிக்கு அவருடைய தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கே குழந்தைகளை இல்லாமல் சிவகாமி வீடிற்கு சென்றதால் கிராமமக்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைகள் குறித்து கேட்டுள்ளனர். முன்னுக்கு பின் பதில் அளித்ததால் இது குறித்து ஊர் நாட்டாண்மை மூலமாக ஜமுனானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜமுனானத்தூர் போலீசார் சிவகாமியை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு ஆலங்காயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆலங்காயம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இரு மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த குற்றத்தை சிவகாமி ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து சிவகாமி மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலாம் கொடுத்த அவரது கள்ளக்காதலன் ராஜா ஆகிய 2 பேரை ஆலங்காயம் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் ஜெ.எம்.3 குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் அடைத்தனர். பெற்ற மகன்களை தாய் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
இனிய ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!
கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!
கண்ணை மறைத்த கள்ளக்காதல்- குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்ற பெற்றத்தாய்.!