by satheesh on | 2026-08-02 09:27 PM
*பெண்ணை கொலை செய்து எரித்த வழக்கில் தந்தை மகன் கைது.*
கோவை பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே பெண்ணை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் தந்தை மகனை போலீஸார் கைது செய்தனர். கிணத்துக்கடவு அடுத்த சென்றாம்பாளையம் பிரிவு அருகே உள்ள தனியார் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்னை கொலை செய்து எரித்தது யார் என்பதை கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்ட 120 கண்காணிப்பு கேமராக்கள் பதிவான காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சியை சேர்ந்த பழனிமுத்து என தெரியவந்தது. இதனை அடுத்து பழனி முத்துவை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்த சங்கீதாவிற்கும், பழனிமுத்துவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக திருமணத்துக்கு மீறிய உறவு இருந்துள்ளது. இருவரும் கிணத்துக்கடவு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், சங்கீதாவுக்கும் பழனிமுத்துவுக்கும் ஏற்பட்ட தகராறில் பழனிமுத்து ஆத்திரத்தில் சங்கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பழனிமுத்துவின் தந்தை குருநாதன் உதவியுடன் சங்கீதாவின் உடலை சென்றாம் பாளையம் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பழனிமுத்து(35) மற்றும் அவரது தந்தை குருநாதன்(60) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலியில் கொலைக்கு தந்தையே உடந்தையாக இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"