by satheesh on | 2026-09-05 08:21 PM
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் குமுறல் - நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு !! மதுரை கோட்டம் திண்டுக்கல் மண்டல நிர்வாகமே!
தேனி மாவட்டம் பெரியகுளம் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் செல்ல வேண்டும் மக்களுடைய பயன்பாட்டிற்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில் பெரியகுளம் பஸ் நிலையத்திற்குள் உள்ளே சென்று வெளியே வருவதற்குள் பெரும்பாடாக இருக்கிறது. இருபுறமும் டூவீலர்கள், நான்கு சக்கர வாகனங்களை வீட்டின் முன்பாகவும், கடைகளுக்கு முன்பாகவும் நிறுத்திக் கொண்டு உரிய வழிகளை விடுவதில்லை அதனால், டூ வீலர் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் நமது பஸ் ஓட்டுநர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும், பஸ் நிலையத்திற்குள் பஸ் நிறுத்துமிடங்களில், ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்களை நிறுத்தி கொள்கின்றனர். லாரி கனரக வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. விழா காலங்களில் தனியார் மண்டபத்தின் முன் வாகனங்களை நிறுத்திக் கொள்வதும், வெடி வெடிப்பதினாலும், நீண்ட நேரம் கூடியிருந்து கொண்டு வழி விடுவதில்லை. விழாவிற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை ரோட்டில் முறையற்ற நிறுத்துவதாலும், பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தி விடுவதாலும் பஸ்கலை இயக்க முடிவதில்லை. பஸ் நிலையத்திற்கு உள்ளே ஆட்டோக்களும் டூவீலர்களும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். மது பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், போதிய கழிப்பிட வசதிகள் இல்லை என்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிலைய பாதையில் முறையற்ற ஸ்பீடு பிரேக்கர்கள் இருப்பதாலும், வர்ணம் பூசப்படாததால் இரவு நேரங்களில் அவை தெரியாமல் விபத்து நேரிடுவதாகவும் உள்ளது. பஸ் நிலையத்தை விட்டு வெளியே கிளம்பும்போது பஸ் நிலையத்துக்கு முன்புறமுள்ள தனியார் மதுபான கூடத்திற்கு வரும் மது பிரியர்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதும், வாகனங்களை முன்புறமே நிறுத்தி விட்டு சென்று விடுவதால் திரும்புவதற்கு போதுமான இடம் கிடைப்பதில்லை. இதையும் சரி செய்ய வேண்டும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு சரி செய்யாமல் இருந்து கொண்டு போக்குவரத்து தொழிலாளர்களை மட்டும் குறை சொல்வது அவர்கள் மீது நடவடிக்கைக்கு செல்வது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல கண்டிக்கத்தக்கது. ஆகவே, திண்டுக்கல் போக்குவரத்து நிர்வாகமும், பெரியகுளம் நகராட்சியும், பெரியகுளம் நகர காவல் துறையும், பெரியகுளம் போக்குவரத்து காவல்துறையும் உடனடியாக இந்த பிரச்சினையை சீர் செய்ய வேண்டும். குறிப்பாக புகார் வந்தால் ஓட்டுநர் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க துடிக்கும் திண்டுக்கல் மண்டல நிர்வாகம் இது சம்பந்தமாக அந்தந்த துறைகளோடு கலந்து பேசி பஸ் நிலையத்திற்குள் உள்ளே சென்று வெளியே வருவதற்கு இடையூறு இல்லாமல் போதுமான வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பெரியகுளம் பஸ் நிலைய பிரச்சனை - நிர்வாக நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு ! சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கை !!
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!