by admin on | 2026-09-04 01:09 PM
திருச்சபை சொத்துக்கள் கூட்டுக் கொள்ளை...
ஆள்மாறாட்ட ஆசிரியர்கள்....
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் வேலை பார்ப்பது போல் கணக்கு காட்டி பள்ளிக் கல்வித்துறையை ஏமாற்றி சம்பளம் பெற்றுவரும் ஆசிரியர்கள்..
ஆள்மாறாட்ட ஆசிரியர்களால் அவமானப்படும் பள்ளிக்கல்வித் துறை.... நடவடிக்கை பாயுமா?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அத்திப்பட்டு ஜெயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அரசு நிரந்தர பணியிடத்தில் ஆள்மாறாட்டம் செய்து அரசை ஏமாற்றி அரசு ஊதியம் வாங்கிய திரு இருதய (தூய இருதய ) சபையைச் சேர்ந்த கிறிஸ்தவ துறவிகளும், ஆசிரியர்களும் சேர்ந்து செய்த ஏமாற்று வேலைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கின் தன்மை உண்மை என நிரூபிக்கப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 0058/ 2026 ன் கீழ் வழக்கு பதிந்துள்ள நிலையிலும் காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம். தூய இருதய சபை தமிழகம் முழுவதும் சுமார் 69 இடங்களில் கிளை அமைப்புகளைக் கொண்டு 43 இடங்களில் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் செயின்ட் ஜோசப் மேல் நிலைப் பள்ளி தாளாளர் வேளாங்கண்ணி ரவி, அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதலை முத்து, சூசைநகர் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஜே. எலியாஸ், அத்திப்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் மோகன், பாளையங்கோட்டை சபையின் பொருளாளர ஜெயசீலன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சபையினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது மேற்குறிப்பிட்ட நான்கு நபர்களும் கிறிஸ்துவ துறவிகள் ஆவர். இவர்களில் மோகன் என்பவர் ஆள் மாறாட்டத்திற்கு துணை போன ஆசிரியர் ஆவார்.
இவர்கள் கூட்டு சதிச் செயலில் ஈடுபட்டு சபை விதி மீறல், ஆசிரியர் பணியில் ஆள் மாறாட்டம், அரசு அனுமதியின்றி முறைகேடாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுதல், பணிக்கே வராமல் சம்பளம் பெறுதல், விவசாய விளைநில குத்தகை மோசடியில் ஈடுபடுதல், வெளிநாட்டு நன்கொடையில் மோசடி, பள்ளிக்கட்டண மோசடி உட்பட பல்வேறு மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக எழுந்த புகாரையடுத்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் தூய இதய சபையைச் சார்ந்த மைக்கேல் தங்கராஜா என்பவரால் புகார் கொடுக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம்
குற்றஎண்: 290/2026 U/S 120(B), 420 IPC படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
*புகாரின் முக்கிய குற்றச்சாட்டுகள்:*
*1. சபை விதிமீறல்:*
புகாரின் படி, அருட்சகோதரர் வேளாங்கண்ணி 2012-2018 வரை சபையின் பொருளாளராகவும், 2018-2024 வரை தலைவராகவும் இருந்துள்ளார். சபையின் தலைவர்/பொருளாளராக இருப்பவர் ஊதியம் பெறும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது என்பது சபை விதி. சபை விதிமீறலில் ஈடுபட்டுள்ளார்.
*2. ஆசிரியர் பணி மோசடி - ரூ.5000 ஊதிய ஆள்மாறாட்டம்:*
2015 ஜூன் முதல் திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பட்டு புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்து, பள்ளிக்கு முறையாக வராமல், ஆசிரியர் மோகன் என்பவரை வகுப்பு எடுக்க வைத்து மாதம் ரூ.5000 மட்டும் கொடுத்துவிட்டு, முழு அரசு சம்பளத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழக பள்ளிக்கல்வித் துறையை ஏமாற்றி பல ஆண்டு காலமாக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு சம்பளம் பெற்றுள்ளர்.
*3. வெளிநாட்டு பயண மோசடி - ரூ.1,11,812:*
அரசு அனுமதியின்றி 21.05.2018 முதல் 24.06.2018 மற்றும் 19.11.2018 முதல் 16.12.2018 வரை சுமார் 63 நாட்கள் வெளிநாடு சென்ற நிலையிலும், பள்ளியில் பணியில் இருப்பது போல் ஆசிரியர் மோகன் மூலம் போலி கையெழுத்திட்டு சுமார் ரூ.1,11,812 சம்பள மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.. இதற்கு Attendance Register, Bank Statement, Passport Entry, Visa ஆகியவை ஆதாரமாக உள்ளது.
*4. பணிக்கு வராமல் சம்பளம் - ரூ.14,52,252:*
01.06.2015 முதல் 02.01.2019 வரை பணி செய்யாமலேயே ரூ.14,52,252 அரசு சம்பளம் பெற்றதாக குற்றச்சாட்டு. இதற்கு அப்போதைய தாளாளர் எலியாஸ், தலைமை ஆசிரியர் மதலைமுத்து, ஆசிரியர் மோகன் உடந்தை என புகாரில் கூறப்பட்டுள்ளது.
*5. விவசாய நில குத்தகை மோசடி:*
சபைக்கு சொந்தமான விவசாய நிலங்களை, ஓய்வு பெற்ற சகோதரர்களை விவசாயிகள் என பொய்யாக காட்டி குறைந்த விலைக்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததாகவும், இதில் சகோதரர் ஜெயசீலன் தொடர்புடையதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
*6. வெளிநாட்டு நன்கொடை (FCRA) மோசடி:*
வெளிநாட்டு SPONSOR-களிடம் இருந்து வரும் பணத்தை சபையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் கணக்கு மோசடி செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு. FCRA கணக்கை ஆய்வு செய்தால் தெரியவரும் என புகார்தாரர் கோரியுள்ளார்.
*7. பள்ளி கட்டண மோசடி:*
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் 2018-2023 காலத்தில் அரசு விதிகளை மீறி ஏழை மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து போலி கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்
இந்த மோசடிகள் குறித்து கடந்த 2021 முதல் புகார் அளித்து வந்ததாகவும், தற்போது குற்றம்சாட்டப்பட்ட நபர் பெங்களூரில் வசிப்பதாகவும், பள்ளிக்கல்வி துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு சபை சொத்துக்களை மீட்டுத்தரவும் கோரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி ஆள்மாறாட்ட புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சபையினர் கோரிக்கை விடுத்துள்ளது. கல்வித்துறையில் ஆள்மாறாட்டம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, ஆள் மாறாட்ட ஆசிரியர்களால் அவமானப்பட்டு தலை குனிந்து உள்ளது வெட்கக்கேடாக உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் இதே போன்ற நிலை நிலவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது திருச்சபைகளுக்கு சொந்தமான அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் முறையாக நிரப்பப்பட்டு உள்ளதா?என்பதனை ஆய்வு செய்து முறைகேடு புகார்களுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் மற்றும் சபையினர்களால் கோரிக்கை எழுந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!