| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!

by satheesh on | 2026-09-06 04:07 PM

Share:


கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் !  திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!

ஒரு வீட்டில் நகை திருட்டு என்றால் அடுத்து என்ன நடக்கும்?  குடும்பத்தினரிடம் விசாரணை, யார் யார் வந்து போனார்கள், சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள், சிசிடிவிக்கள், சந்தேக லிஸ்டில் உள்ளவர்களின் செல்போன் உரையாடல் லிஸ்ட், உள்ளூர் நகை விற்பனை கடை மற்றும் அடகு கடைகளில் விசாரணை என பல கோணத்தில் பல கட்டங்களில் போலீஸ் மும்முரமாக இயங்கும். போலீஸ் முழு மனது வைத்தால் ஆண்ட்ராய்டு செல்போன்- சிசிடிவி உலகில் குற்றவாளிகள் தப்புவதென்பது மிக மிக கடினமான காரியம். இப்படி இருக்கும் சூழலில் GenZ ஜோடி ஒன்னு செம காமெடி பண்ணி இருக்கிறது..   

பொள்ளாச்சியில் ஒரு வீட்டில் ஒன்பது சவரன் நகை திருட்டு - போலீஸ் விசாரித்த போது அந்த வீட்டுக்கு கடைசியா வந்து போனது நண்பருடைய மகள் என்று  தெரிந்தது. அதனால சந்தேக லிஸ்ட்ல அந்த 19 வயசு கல்லூரி மாணவியை சேர்க்காம போலீசால இருக்க முடியுமா? பொண்ணு ஆக்டிவிட்டீஸ் மேலே ஜூம் போடாமத்தான் இருப்பாங்களா? இந்த சாதாரண விஷயம் கூட அந்த பொண்ணுக்கு தெரியல. அது பாட்டுக்கு நீட்டா, நகையை கொண்டு போய் வித்து பணமாக்கி லவ்வர் கிட்ட வாடா உனக்கு காஸ்ட்லி பைக் வாங்கி தாரேன்னு சொல்லியிக்கு.. காலேஜ் படிக்கிற பொண்ணுக்கு எப்படி லட்சக்கணக்கில் பணம் இருக்கும்னு அந்த ஜோக்கர் பையனுக்கும் யோசிக்க தோணல. பயமும் தலை தூக்கல. திடீர்னு காஸ்ட்லி வண்டியோட வீட்டுக்கு போனா வீட்லயும் அக்கம் பக்கத்துலயும் கேப்பாங்களே.. அத பத்தியும்கூட யோசிக்கல, ரெண்டு பேரும் போறாங்க, காஸ்ட்லி பைக் வாங்குறாங்க, இன்ஸ்டாவுல கெத்தா  ஃபோட்டோஸ் போடுறாங்க.. இதுக்கு மேல இதுல விளக்கமா சொல்லனுமா? இதுக்கு நேரா அந்த பொண்ணு திருடுன சாரி, எடுத்த நகையோட  போலீஸ் ஸ்டேஷனுக்கே போய், சொந்த நகையை விற்க விடமாட்டேன்றாங்கன்னு சொல்லி போலீசார் கிட்டயே பைக் வாங்க பாதுகாப்பு கேட்டிருக்கலாம். இளம் வயதினரின் ஆசைக்கு உதவாமல் நகைகளை பதுக்கி வைத்திருந்த பெருசுகளை  கண்டிக்காமல், காதலனை கம்பீரமாக வாழ வைத்து பார்க்க ஆசைப்பட்ட ஒரு கல்லூரி மாணவியை திருட்டு வழக்கில் உள்ளே தூக்கி போடுகிறது.. எதிர்கால சமூகத்திற்கு சாபக்கேடு !


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment