| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!

by satheesh on | 2026-09-06 09:56 PM

Share:


ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர்  - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!

மாணவர்களுடன் சென்ற பள்ளி வாகனம் பாதியில் நிறுத்தம்: ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக புகார்!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளியைச் சேர்ந்த பள்ளி வாகனத்தில், கடந்த 2-ம் தேதி பள்ளி முடிந்து 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும், அவரால் வாகனத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாகனத்தில் இருந்த மாணவர்கள் அச்சமடைந்து கூச்சலிட்டதாகவும், இதனை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் வாகனத்தை பாதி வழியிலேயே நிறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாகனம் நிறுத்தப்பட்ட பின்னரும் ஓட்டுநர் நிதானமின்றி இருந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,  இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சம்பந்தப்பட்ட ஓட்டுநரையும் பள்ளி வாகனத்தையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் தகுதி, உடல்நிலை உள்ளிட்டவற்றை பள்ளி நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளி வாகன ஓட்டுநர் மது போதையில் வாகனம் இயக்கியதாக கூறப்படும் புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்த பள்ளி வாகனம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து நிலக்கோட்டை காவல்துறை டி.எஸ்.பி. அவர்களிடம் கேட்டபோது, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 இது போன்று தொடர்ந்து பல சம்பவங்கள் நிகழ்பெற்று வருவதால் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment