| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!

by satheesh on | 2026-09-15 02:57 PM

Share:


ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!

ரயிலில் கணவருக்கு சீட் வாங்கிக் கொடுத்து விட்டு , மனைவியை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறல் – டிடிஇ கைது!

திருவனந்தபுரத்திலிருந்து நிஜாமுதீன் நோக்கிச் சென்ற ரயிலில், முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த தம்பதியிடம் சீட் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, இளம் பெண்ணை அழைத்துச் சென்று டிடிஇ பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கண்ணூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, சீட் தொடர்பாக திருச்சூர் மற்றும் வள்ளத்தோள் நகர் இடையே டிடிஇயை அணுகியுள்ளனர். கணவருக்கு சீட் வழங்கிய பின்னர், மனைவிக்கு வேறு இடத்தில் சீட் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணை டிடிஇ அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் உடனடியாக ஷொர்ணூர் ரயில்வே போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். ரயில் ஷொர்ணூர் வந்தடைந்ததும் போலீசார் டிடிஇயை கைது செய்தனர். கொல்லம் கடைக்கல் பகுதியைச் சேர்ந்த ஷிஜு (47) என்பவரையே ஷொர்ணூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய மருத்துவப் பரிசோதனையில், அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட டிடிஇ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டிடிஇயை பணியிடைநீக்கம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment