by satheesh on | 2026-09-07 11:08 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் பொன்நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ஜக்கம்மாள் (வயது70)மர்ம சாவின் பின்னணி :
இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வாழ்ந்து வருகின்றனர். என கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜக்கம்மாள் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை பார்த்தபோது அவரது கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் போலீசார் சந்தேகித்தனர். மாவட்ட எஸ்.பி. பிரவீன்க வுதம் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். ஜக்கம்மாள் வீட்டிற்கு தினந்தோறும் பால் ஊற்றி வரும் வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஜக்கம்மாளின் அக்கா மகள்களான ஜங்கால்பட்டி யை சேர்ந்த அய்யம்மாள் (42) நாகராணி(38) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜக்கம்மாள் தங்கள் குடும்பத்திற்கு செய்வினை வைத்ததால் கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வாக்குமூலம் :
இது குறித்து அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-ஜக்கம்மாளும் எங்கள் அம்மாவும் சகோதரிகள் என்பதால் சிறு வயது முதலே நாங்கள் அவரது வீட்டில் வளர்ந்து வந்தோம். இருந்தபோதும் ஜக்கம்மாளுக்கு தங்கள் குழந்தைகளை விட எங்கள் மீது வெறுப்பு இருந்து வந்தது. மேலும் எங்கள் அம்மாவை செய்வினை வைத்து கொலை செய்தது நான்தான் என எங்களிடமே அடிக்கடி கூறி வந்தார். எனது தந்தைக்கும் செய்வினை வைத்துள்ளேன் என கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாந்தரிகம் செய்து சேவலை வெட்டி எங்கள் வீட்டு வாசலில் வீசி இருந்தார். அதன்பிறகு எங்கள் குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இவர் இருக்கும் வரை எங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார் என்பதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதன்பிறகு அவரிடம் அன்பாக இருப்பது போல் நடித்து அவருக்கு பிடித்தமான சாப்பாடு வழங்கி வந்தோம். சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு தற்கொலை செய்தது போல செட்அப் செய்து விட்டு வந்துவி ட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
செய்தியாக்கம் : இணை ஆசிரியர்: N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி மற்றும்bஆண்டிபட்டி தாலுகா நிருபர் மீனாட்சிசுந்தர்.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!