| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!

by admin on | 2026-09-11 09:32 PM

Share:


பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!

தேனி மாவட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்தராவ், இ.ஆ.ப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.!!


தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி சமுதாய சமையல் கூடத்தில் இன்று (11.09.2026) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்தராவ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, தேனி ஊராட்சி ஒன்றியம் கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.09.2026) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடர்பான முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரத்தினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பயனடைந்திடும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்கள்.

அடினடிப்படையில், இத்திட்டத்திம் விரிவாக்கம் செய்வதன் மூலமாக தேனி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 168 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 13363 மாணவ, மாணவியர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 50 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 4636 மாணவ, மாணவியர்களும், நகராட்சிப் பகுதிகளில் உள்ள உள்ள 85 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 12057 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 303 பள்ளிகளில் பயிலும் 30,056 மாணவர்கள் பயனடைவார்கள்.

அதுமட்டுமல்லாமல், முதலாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 392 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 17392 மாணவ, மாணவியர்களும், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 96 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 5615 மாணவ, மாணவியர்களும், நகராட்சிப் பகுதிகளில் உள்ள 131 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 14646 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 619 பள்ளிகளில் பயிலும் 37,653 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[9/11, 5:40 PM] Muthukamatchi Muthu: இத்திட்டத்தின்கீழ், நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சமுதாய சமையல் கூடங்களிலிருந்து காலை உணவு சமைத்து வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோன்று, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாக காலை உணவு சமைத்து பரிமாறப்படுகிறது.

மேலும், காலை உணவு சமைக்கக்கூடிய இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, சமைப்பதற்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு உருளைகள் தேவைகேற்ப உள்ளதா என கேட்டறிந்ததுடன், காலை உணவினை தரமான முறையில் சமைத்து உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்குவதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்தராவ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.தேவ்லேந்து, இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.வீராச்சாமி அவர்கள், தேனி-அல்லிநகரம் நகராட்சி செயற்பொறியாளர் திரு.திலீப்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) திரு.சுப்புராம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment