by satheesh on | 2026-09-09 01:43 PM
மதுரையில் சைபர் குற்றத்தின் மூலம் வரும் பணத்தை டாலராக மாற்றி அனுப்பி (ID RUNNING) சைபர் குற்றவாளிகளுக்கு உதவிய 3 பேர் கைது :
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்து, அவர்களிடமிருந்து 26 Bank Pass books, 18 mobile Phones, 77 ATM cards, 18 Cheque Books, 60 Sim Cards ஆகியவற்றை கைப்பற்றி சைபர்கிரைம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த சைபர் கிரைம் போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பராஸ்கான்(23), ஹபீப் முகமது(21), முகமதுமுபாரக் (23) என்றும் அதில் பராஸ்கான் என்பவர் Visual Communication படித்து முடித்து விட்டு தற்போது வேலை ஏதும் இல்லாத காரணத்தினால் குறுக்கு வழியில் அதிகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவருடைய வங்கி கணக்கையும் பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளையும் பெற்று அதன் மூலமாக சைபர்குற்றத்தில் பொதுமக்களை ஏماற்றி வரும் பணத்தை ATM withdrawal செய்து அதை டாலராக மாற்றி (ID running job) அனுப்புவதற்கு உதவியாக இருந்துள்ளார். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்து நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி அவருக்கு உதவியாக ஹபீப் முகமது மற்றும் முகமது முபாரக் ஆகியோர் உதவியுடன் இதை செய்து ஒரு லட்ச ரூபாய் இந்திய பணத்தை 1000 டாலராக மாற்றி அனுப்பி அதற்கு கமிஷனாக ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.6,300/- கமிஷனாக பெற்றுள்ளார். இவ்வாறாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை 10 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக பெற்றுள்ளார். அதை மேற்கண்ட எதிரிகள் மூவரும் பங்கிட்டு ஜாலியாக செலவு செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 26 Bank Pass books, 18 mobile Phones, 77 ATM cards, 18 Cheque Book, 60 Sim Cards ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!