| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!

by satheesh on | 2026-09-13 12:03 PM

Share:


பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!

வேலை செய்த வீட்டில் பணம்/நகை திருடிய பெண்ணும் அவரது கணவரும் 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸ் :

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மனைவி பாக்கியபாலா, வயது-63, என்பவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் தனது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பாக்கியபாலா சிறு வயதுடைய 4 பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த பேரக்குழந்தைகளை கவனிப்பதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், ரோஜாவனம் டிரஸ்ட் எனும் நிறுவனத்தின் மூலமாக, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணத்தை சேர்ந்த முத்துஷபியா, வயது-47, என்பவரை வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில், பாக்கியாபாலா, 28.08.26 அன்று தான் அடமானம் வைத்திருந்த வங்கியிலிருந்து 12 1/4 பவுண் நகைகளை திருப்பி கொண்டு வந்து, தனது பீரோவில் 12 1/4 பவுண் நகைகளையும் மீதமுள்ள பணம் ரூ.65,500-யையும் வைத்துள்ளார். இதனை, 08.09.26 அன்று பீரோவை திறந்து பார்க்கும் போது நகைளையும், பணத்தினையும் காணவில்லை. இது சம்மந்தமாக அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேற்படி புகாருக்கு வழக்கு பதிவுசெய்யப்பட்டு, உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  தடயவியல் சோதனையில் பீரோவில் பணிப்பெண் முத்துஷபியா (47) கைரேகை பதிவாகியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அவர் பை ஒன்றை இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் கொடுத்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.  விசாரணையில் அவர் முத்துஷபியாவின் கணவர் ஹசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படையினரை எஸ்.பி. ஸ்டாலின் பாராட்டினார்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment