| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!

by satheesh on | 2026-09-15 07:20 PM

Share:


மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!

40 வருட நண்பன் செஞ்ச துரோகம் " மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 62 வயது பாக்குமட்டை வியாபாரி. பலமுறை கண்டித்தும் கேட்காததால் தீர்த்துக்கட்டிய நண்பன். நடுநடுங்கும் கோவை..!!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில், 40 ஆண்டுகால நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாகப் பாக்குமட்டை வியாபாரியும், திமுக பிரமுகருமான நாகராஜ் (62) என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வந்த நாகராஜுக்கும், அவரது நெருங்கிய நண்பரான கந்தசாமியின் (65) மனைவி பாக்கியாவிற்கும் (58) இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த கந்தசாமி பலமுறை கண்டித்தும் நாகராஜ் கேட்காததால், இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கடுமையான மோதல் நிலவி வந்துள்ளது. சம்பவத்தன்று காலை நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நரசீபுரம் பகுதியில் கந்தசாமி அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கந்தசாமி தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் நாகராஜைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார் நாகராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கந்தசாமியைத் தேடி வந்த போலீசார், அவரைப் பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் அவரை மீட்ட போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துக் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்து வரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment