by Muthukamatchi on | 2025-03-06 01:46 PM
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா .தேனிவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில், கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா நடந்தது .விழாவிற்கு கல்லூரி குழுமத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று பேசினார்.விழாவில் கல்லூரிக்கு இடையேயான மாணவ மாணவிகளுக்கு குழு நடனம், பாட்டுப்போட்டி ,ஊமை நாடகம், தொழில் திறன் வினாடி வினா, கழிவிலிருந்து கலைப் பொருள்கள் செய்தல் ,புகைப்படம் ,திறன் மேம்பாடு உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் தேனி ,மதுரை ,திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 27 கல்லூரிகளில் இருந்து ,ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி குழுமத் தலைவர் மோகன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். போடி ஏல விவசாய சங்க கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும் ,பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசையும் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் வேல்ராஜன், கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை தலைவர் உமா மகேஸ்வரி உட்பட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். படம் செய்தி பிரவின் ஆண்டிப்பட்டி தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!