by admin on | 2025-02-17 04:44 PM
மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில்
நடிகர் யோகி பாபு தரிசனம்
மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் காமெடி நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி அடைந்தவர் நடிகர் யோகி பாபு. காமெடியனாக ஒரு சில கதாபாத்திரங்களில் தலைகாட்டிய இவர், முன்னணி காமெடியனாகவும் வலம் வருகிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, தீவிர கடவுள் பக்தர். தமிழ்நாடு முழுதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் அடிக்கடி சென்று சுவாமி தரிசனம் செய்து வருவது அவரது வழக்கம்.
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு நேற்று அவர் திடீரென வருகை புரிந்தார். சுவாமி, அம்பாளை தரிசனம் செய்துவிட்டு கிழக்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தவர் அங்கிருந்த கடைகளுக்குச் சென்றார். மீனாட்சி சொக்கநாதர் படம், மதுரையில் பிரபலமான பித்தளை குத்துவிளக்கு, கண்ணாடி பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களையும் வாங்கினார்யோகி பாபுவின் திடீர் வருகையை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டு பின்னர் கிளம்பினார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!