by admin on | 2025-02-15 10:16 AM
திண்டுக்கல் அருகே போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்த வாலிபருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காகமருத்துவமனையில் சேர்த்தனர்.
திண்டுக்கல், யாகப்பன்பட்டி அந்தோணியார் கோவில் அருகே கடந்த 12ஆம் தேதி நின்று கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த R. ஜேசுராஜ், S.சேசுராஜ் உள்ளிட்ட 5 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக தாலுகாகாவல் நிலையஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலானபோலீசார்அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தற்போது சம்பவத்தில் ஈடுபட்ட நல்லாம்பட்டி சேர்ந்த தினேஷ் (எ) அகோரிதினேஷ், பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், துளசிராஜன், நாகல்நகரை சேர்ந்த விஜய் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்துஅரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல்செய்துநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கின் முக்கியகுற்றவாளியான திண்டுக்கல் அருகே உள்ள கண்ணார்பட்டி சேர்ந்த கண்ணன் மகன் யுவராஜ் (எ) யுவராஜ்குமார்(35) என்பவர் நல்லாம்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்தரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார்தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது முட்புதரில் பதுங்கிஇருந்த யுவராஜ் போலீசாரை பார்த்து பார்த்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் என்றும்பாராமல்மனிதாபிமானஅடிப்படையில் போலீசார் உடனடியாக அவரை மீட்டு திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாலுகா போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.
படம் செய்தி : மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!