by admin on | 2025-02-12 08:18 PM
ரெட்டியார்சத்திரம் அருகே கள்ளக்காதலியின் கணவரை கொன்று ஜாமினில் வெளிவந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் முருகபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் (24) இவர் திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் அடுத்துள்ள கதிரனம்பட்டி அருகே காரில் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் அவரது காரை இடித்து தள்ளி வசந்தை சாலையின் நடுரோட்டில் இறக்கி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி. கார்த்திகேயன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வசந்தின் கள்ளக்காதலி கலைச்செல்வியின் அண்ணன் தாடிக்கொம்புவை சேர்ந்த குமரேசன், சபரிபாலன், சந்தனக்குமார்,அடியனூத்தை சேர்ந்த சங்கர்மணி, திண்டுக்கல்லை சேர்ந்த சீனிவாசபெருமாள், போஸ், திருநாவுக்கரசு, முத்துச்சாமி, சின்ராஜ், செல்லப்பாண்டி ஆகிய 10 பேரை கைது செய்த கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டபோது வசந்த் மற்றும் கள்ளக்காதலி கலைச்செல்வி இடையூறாக இருந்த கலைச்செல்வியின் கணவர் அழகர்ராஜாவை வசந்த் கொலை செய்துசிறையில் இருந்துள்ளார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த வசந்த் மற்றும் கள்ளக்காதலி கலைச்செல்விக்கும் இடையே ஏற்பட்டதகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்தெரியவந்துள்ளது.
படம் செய்தி நன்றி.
மோகன் கணேஷ் திண்டுக்கல்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!