by admin on | 2025-02-12 11:36 AM
தேனி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகின்ற கஞ்சா மற்றும் அதன் விற்பனையாளர்களை கைது செய்வதோடு விற்பனை செய்த வெளிமாநில வியாபாரிகளையும் வெளி மாநிலங்களுக்கு சென்று தேனி மாவட்ட போலீசார் அடித்து தூக்கி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகைஅண பிக்அப்அணை செல்லும் வழியில் வனகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கஅருகே வைகைபுதூரைச் சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் போடிநாயக்கனூரைச் சேர்ந்த கோவிராஜா என்பவர் வாடகைக்குவசித்து வந்தார். அவர்போதைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்வதாக ஆண்டிப்பட்டி காவல்நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்
நேற்று கோவிராஜா தங்கியிருந்த வைகைஅணை வீட்டில் அதிரடிசோதனை மேற்கொண்டனர். சோதனையில் 47 மூட்டை குட்கா போதைப் பொருள்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் கோவிராஜாவை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் கைது செய்தார்.மேலும்விசாரணையை தீவிரபடுத்தியுள்ளார். 47 மூட்டை குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
நிருபர் கோபிநாத் தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!