by admin on | 2025-02-11 04:40 PM
ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா. அனைத்து கட்சியினர் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் 442 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில், ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, இளைஞர் அணி செயலாளர் செந்தூரி செல்வம்மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் அய்யனன் ஆகியோர் முன்னிலையில் திமுகஒன்றிய அலுவலகத்தில் இருந்து ,மேளதாளம் முழங்க ,கரகாட்டத்துடன் ஊர்வலமாக வந்து, பஸ் நிலையம் அருகில் உள்ள மன்னர் திருமலை நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில்கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில் ,ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி,நிர்வாகிகள் வெள்ளைபாண்டி, பொன்முருகன், மாரியப்பன் ,ஜெயராமன் உள்ளிட்டோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ,ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில் திருமலை நாயக்கரின் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதிமுக சார்பில்மாவட்ட செயலாளர் வி. எஸ் கே .ராமகிருஷ்ணன் தலைமையில் ,ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், பாண்டிசெல்வம், பேரூராட்சி செயலாளர் ரத்தினவேல் முன்னிலையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பாஜகசார்பில் நிர்வாகிகள் வழக்கறிஞர் குமார் ,கண்ணன்,மனோஜ் குமார், கார்த்தி ,கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆண்டிபட்டி வட்டார நாயுடு ,நாயக்கர் மகாஜன சங்க விழா குழுவினர் செய்திருந்தனர்.
நிருபர். பிரவின். ஆண்டிபட்டி தேனி. மாவட்டம்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!