by admin on | 2025-02-09 01:55 PM
கோவை மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கைதி இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு ஆயுள்தண்டனை கைதியான விக்ரம் என்பவர் சிறைக்குள் தன் உயிருக்கு ஏதேனும்ஆபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதி விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறுவது என்னுடன் இருந்த கைதியை கொலைசெய்து விட்டார்கள் எனவும்,அடுத்தது நான் தான் எனக்கு எது நடந்தாலும்,சதீஷ், கிருபாகரன், பாலு, மோகன்ராம் எனகுறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள பெயர்கள் கோவை மத்திய சிறை சாலையில் பணி புரியும் போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பல ஆண்டுகளாக கோவைமத்தியசிறைச்சாலையில்தொடர்ந்துபணியாற்றுவதாக கூறப்படுகிறது. கைதி விக்ரம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது .இது குறித்து கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு தனது குடும்பத்தார் மற்றும் வழக்கறிஞளுடன் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோ காட்சி எப்படி வெளியானது என கேள்வி எழுந்துள்ளது.
நிருபர் சதீஷ்குமார் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!