by admin on | 2025-02-08 03:42 PM
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை என T N P S C தகவல்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (T N P S C.), குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், T N P S C யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு T N P S C இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை T N P S C மறுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள T N P S C '2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளது.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!