by admin on | 2025-02-08 02:46 PM
குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பில் 70 சவரன் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபர் கைது.
திண்டுக்கல், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமெண்ட் ஆலை குடியிருப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகளை குறிவைத்த கொள்ளையர்கள், பூட்டை உடைத்து வீடுகளுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி.இலக்கியா தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மத்தியபிரதேசம் தார் மாவட்டம் தண்டா கிராமத்தை சேர்ந்த திலீப் மகன் கலாம்(24) என்பவரை மத்தியபிரதேசம் சென்று கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி நன்றி : மோகன் கணேஷ் திண்டுக்கல்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!