by admin on | 2025-02-07 05:33 PM
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள அப்பிப்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் வேல்மணி ( 54 ) . அதே தெருவில் இட்லி கடை வைத்து நடத்தி வரும் ராணி என்பவருக்கும் வேல்மணிக்கும் கடந்த மாதம் சாக்கடை கடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் வேல்மணி ராணியை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட வேல்மணி தற்போது ஜாமினில் ஊருக்கு வந்துள்ளார்.
ஜாமீனில் வந்தவர் நேற்று இரவு வெளியே நின்று கொண்டிருந்தபோது அப்போது அங்கு வந்த ராணியின் உறவினரான சிவச்சந்திரன் (29) என்பவர் தன் உறவினரான ராணியை எப்படி தாக்கலாம் என்று கூறி அருவாளை எடுத்து வந்து வேல்மணியின் தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டியதில் வேல்மணி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேலும் அருவாளால் வெட்டிய சிவச் சந்திரன் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த வேல்மணியை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து , அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாக்கடை பிரச்சனையில் கொலை நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் செல்வ பிரபா உத்தமபாளையம் தேனி மாவட்டம்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!