by admin on | 2025-02-07 12:22 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மாவட்ட போலீஸ் துறை சார்பில் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது
தைப்பூச பக்தர்களின் நலன் மற்றும் உதவிக்காக பழனியில் 25 போலீஸ் உதவி மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இதில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. குற்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு உதவிடவும் 'மே ஐ ஹெல்ப்' என்ற பெயரில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அடிவாரம், பஸ் நிலையம், கிரிவீதிகளில் 37 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 பேர் கொண்ட 28 குற்ற தடுப்பு போலீஸ் குழு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை இருக்கும். எனவே 4 நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என பழனி டிஎஸ்பி.தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!