by admin on | 2025-02-07 11:32 AM
திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பள்ளி தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியின் உறவினர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க உடனடியாக களம் இறங்கிய போலீசார்
தனியார் பள்ளி தாளாளர் சுதா உட்பட பள்ளி நிர்வாகிகள் 4 பேரை கைது செய்தனர். பள்ளி வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் மாணவி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவியின் உறவினர்கள் அதே பள்ளிக்கு சொந்தமான மெட்ரிகுலேஷன் பள்ளியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மாதா பிதா குறு என்று மிகவும் உயரிய மதிப்போடு அழைக்கப்படுகின்ற ஆசிரியர் சமுதாயத்தில் பள்ளி தாளாளர் என்ற கர்வத்தோடு இந்த இச்சை செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!