by admin on | 2025-02-06 07:30 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ-யை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாக கூறப்பட்ட சம்பவம், பெண் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை, காரைக்குடி அருகே சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. அங்கு பிரச்னை தொடர்பாக புகார் மனு அளிப்பதற்காக வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் வந்திருந்தார். அவர் எஸ்.ஐ., பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும், பின் தகராறாக மாறி எஸ்.ஐ., தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.ஐ., பிரணிதா கூறியதாவது:
வி.சி.க.,நிர்வாகி இளைய கவுதமன்போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த நிலையில் என்னைமிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை கீழே தள்ளிவிட்டு சட்டையை கழட்டி விடுவேன். போஸ்டர் ஒட்டி விடுவேன். உனக்குஎதிராக போராட்டம் நடத்துவேன் என்றார். இதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன்'' என்றார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!