by admin on | 2025-02-05 07:50 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் கிராமத்தில் முருகமலை ஓடை மற்றும் நீ சொல்லும் வாய்க்கால் இரண்டும் இணையும் இடத்தில் விவசாய நிலத்தின் பாதுகாப்புக்காக பொதுப்பணி துறை மூலம் மூலம் தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது . தடுப்பு சுவரை தனி நபர் ஒருவர் தன் விவசாய நிலத்துக்கு செல்ல பாதை அமைக்க தடுப்பு சுவரை இடித்தும் கரை மண்ணை அள்ளி சேதப்படுத்தி உள்ளார். மேலும் கரைக்கு கிழக்கு பக்கம் உள்ள 25 ஏக்கர் விவசாய விளை நிலங்களுக்குநீர் செல்லும்
மடையை உடைத்து மூடிவிட்டார். இதனால் கிழக்கு பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . இதன் மூலம் நீர் வரத்து கால்வாய் நீர் வரத்து ஓடை இரண்டையும் ஆக்கிரமிப்பு செய்து கரைகளை சேதப்படுத்திய நபர் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியுள்ளனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!