by admin on | 2025-02-04 06:58 PM
திருப்பூரில் தனியார் பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிற்கான பெயிண்டுகள் தின்னர்கள் முற்றிலும் எரிந்தன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் கிருஷ்ணா டெமி என்ற பெயரில் வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய பெயிண்ட் மற்றும் தின்னர் வகைகளை வாங்கி ஸ்டாக் வைத்து திருப்பூர் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் இந்த குடோன் வைத்து நடத்தி வந்த நிலையில் இன்று மதியம் பெயிண்ட் மற்றும் தின்னர் இருந்த குடோனில் உள்ள ஒரு அறையில் இருந்து தீ எரிவதை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயானது அந்த அறையில் இருந்த பெயிண்ட் மற்றும் தின்னர் கேன்களில் பரவியதை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் 2 வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் ஈடுபட்டனர். இதனிடையே குடோனையில் இருந்த தொழிலாளர்கள், குடோனில் இருந்து வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பெயிண்டுகள் மற்றும் தின்னர்கள், இருச்சக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி படங்கள் நன்றி முத்தழகர் திருப்பூர்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!