by admin on | 2025-02-04 05:41 PM
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மதுரை கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனை எதிர்த்து நேற்று இந்து முன்னணி சார்பாக மெட்ராஸ் ஹைகோர்ட் மதுரை கிளை அமர்வில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இன்று விசாரணையின் போது நீதிபதிகள் ஜெயச்சந்திரன் பூர்ணிமா அமர்வு, இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!