by admin on | 2025-02-03 02:09 PM
மதுரையில்
144 தடை உத்தரவு உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
படிகட்டு இல்லாமல் மலை மீது ஏறி விடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மேரி காடுகள் கொண்டு மலையை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
நாளை இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.
இதனால் இந்து மற்றும் இசுலாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி, இரண்டு படி பாதைகளிலும் மற்றும் மலை மீது 300-க்கும் மேற்பட்ட காவல்துறைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்கட்டுகள் இல்லாமல் வேறு எந்த பாதையிலும் யாரும் ஏறாத வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரி காடுகளைக் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலைமீது சென்று வழிபாடு நடத்துவதற்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அனுமதி உள்ள நிலையில் வருபவர்களின் பெயர் விவரங்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து அதன் பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்து அமைப்பினர் நாளை மாலை ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதால் நாளை கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நிருபர் பாஸ்கரன் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!