by admin on | 2025-02-03 01:36 PM
போலி எஸ்.ஐ., கைது:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலை, அடுக்கம் அருகே உள்ள சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம். இவரது வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று செல்வம் மீது வழக்கு உள்ளதாகவும், எஸ்.பி., புகாரின் அடிப்படையில் விசாரிக்க வந்ததாகவும் கூறினார். மேலும் வர மறுத்தால் அடித்து இழுத்துச் சென்று ஜெயிலில் அடைத்து விடுவேன் எனவும் மிரட்டி மாதம் ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் எனவும் கூறினார். துரைராஜ் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த செல்வம் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து சென்ற கொடைக்கானல் போலீசார் போலி எஸ்.ஐ. துரைராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!