| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

01-01-2025 முதல் வங்கிகளில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள். விதிமுறைகளை தளர்த்த வேண்டும் விவசாயிகள் வேண்டும்

by admin on | 2025-01-29 05:21 PM

Share:


01-01-2025 முதல் வங்கிகளில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள். விதிமுறைகளை தளர்த்த வேண்டும் விவசாயிகள் வேண்டும்

விவசாயிகள் பொதுமக்களுக்கு கடந்த காலங்களில் வங்கிகளில் தங்க நகை வாங்கியவர்கள் வருடம் ஒரு முறை புதுபித்து ரினிவல் செய்து வட்டியை மட்டும் செலுத்தி வந்தது வழக்கமாக இருந்து வந்தது இந்த முறை மாற்றப்பட்டு கடந்த 1-1.2025 ஜனவரி முதல் ரிசர்வு வங்கி ஒரு உத்தரவை பிறபித்தது இந்த உத்தரவில் வாடிக்கையாளர்கள் தாங்கள் வைக்கும் தங்க நகை கடன் முறையில் மாற்றம் செய்து அசலையும் வட்டியையும் சேர்த்து பணத்தையும் செலுத்தித்தான் புதுபிக்க வேண்டும் என்ற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் சர்க்குலர் அனுப்பி உத்தரவிடபட்டது இந்த மாற்றத்தால் விவசாயிகள் பொதுமக்கள் மிக மிக கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர் விவாசாயிகள் கஷ்ட்டத்துக்காக தங்கள் நகைகளை அடகு வைத்து அதில் வரும் பணத்தை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள் இப்படி இருக்கும் வேலையில் அசலையும் வட்டியும் செலுத்தி ரினிவல் செய்வது விவசாயிகளை கடன்சுமை அதிகமாவது தவிற இந்த முறையால் விவாசாயிகளுக்கு எந்த நன்மையும் பலனும் இல்லை ஒருவர் 3 லட்சம் நகை கடன் வாங்கி விட்டு வங்கிக்கு சென்று ரினிவல் செய்யும் போது அசலையும் கட்டுவதற்கு அவ்வளவு பெரிய தொகையை வெளி நபரிடம் எப்படி வாங்கி செலுத்துவது என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் வெளி நபரிடம் கடன் வாங்கி தான் அந்த ஒரு நாளுக்காக . பணம் கட்ட வேண்டி உள்ளது அதுவும் 2 - ரூபாய் வட்டிக்கு வாங்கி வங்கிக்கு கட்ட வேண்டி உள்ளது அதுவும் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க வெளி ஆட்கள் முன்வருவதில்லை அப்படி 1 நாளைக்கு வட்டிக்கு கேட்டால் நில பத்திரத்தை கேட்கிறார்கள் அல்லது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து தான் அசலை வங்கிக்கு கட்ட வேண்டி உள்ளது இதனால் விவாசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் அந்த ஒரு நாளில் பணம் கட்ட முடியாமால் போனால் நகைகள் ஏலத்துக்கு போகும் நிலைமையில் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலையில் உள்ளார்கள் மத்திய அரசு வருடம் 6000 விவசாயிகளுக்கு கொடுத்து விட்டு 4% (33) பைசாவில் விவசாசய நகை கடன்களுக்கு கொடுத்து வந்தார் மானியத்தையும் இந்த வருடம் நிறுத்தி விட்டார்கள் இதுவும் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது காலங்காலமாக கொடுத்து வந்த இந்த மானியத்தை மத்திய அரசு ஏன் நிறுத்தி விட்டது என்று தெரியவில்லை நாட்டில் முதுகெலும்பாக மழை காலம் வெய்யில் காலம் என்ற வியர்வை சிந்தி உழைத்து நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளுக்கு இந்த நிலமை இதை மத்திய அரசு உணர்வுபூர்மாக சிந்திக்க வேண்டும் ஏன் தங்க நகை கடன் வாங்கினோம் என நினைத்து நினைத்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிற நிலமை 1-1.2025 முதல் உள்ளது உடனடியாக மத்திய அரசு இந்த விசயத்தில் தலையிட்டு 4%) (33 பைசாவில் கொடுக்க கூடிய தங்க நகை கடன்களுக்கு மானியத்தை உடனே விடுவிக்க நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வங்கியில் வாங்கிய தங்க நகை கடன்களுக்கு அசலுடன் வட்டியை சேர்த்து செலுத்தும் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் பழைய முறையே வட்டியை மட்டும் செலுத்தி புதி பிக்கும் முறையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசையும் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சரையும் ஒட்டு மொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நீங்கள் இதை செய்ய வில்லை என்றால் எதிர் காலத்தில் வங்கியில் தங்க நகை கடன் வாங்குவது விசாயிகளின் கானல் நீராகத்தான் இருக்கும் என்பதை இங்கு சுட்டி காட்டுகிறோம் - இப்படிக்கு நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் இந்த பதிவின் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment