by admin on | 2025-01-28 12:22 PM
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ரூ.16 லட்சம் இருந்த பணப்பையை திருடிய பிரபல திருடர்கள் 3 மூன்று பேர் கைது*
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்தில் ஆந்திராவை சேர்ந்த வீராஞ்சநெயலு(64) என்பவர் ரூ.16 லட்சம் பணம் கொண்ட பணப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுஇதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் நகர் குற்றத்தடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் CCTV பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல திருடர்கள் பாண்டித்துரை(47), செல்வம்(54) மற்றும் அவரது மனைவி பிரியா(39) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
போட்டோ செய்தி நன்றி மோகன் கணேஷ் திண்டுக்கல்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !