by admin on | 2025-01-26 07:41 AM
இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சிவழங்கப்படும் என்று
வால்ரஸ் டேவிட் மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி இனைந்து பேட்டியளித்தனர்.
உடல் மற்றும் மனதளவில் வலிமையானவர்களை தேர்வு செய்ய மாரத்தான் போட்டியை நடத்தி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ.தொழில்நுட்பபயிற்சி வழங்கப்படும் என்றும் வால்ரஸ் டேவிட் மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி பேட்டியளித்தனர். திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வால்ரஸ் நிறுவனம் மற்றும் எஸ்இந்தியா கேன் அமைப்பு, பின்னலாடை தொழிலில் உலக அளவில் முதன்மையானதாகவும், மிகப்பெரிய சந்தையாகவும் மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக இளைஞர்கள், பெண்களுக்கு இலவச பயிற்சிகளையும், உதவிகளையும் வழங்கிவருகின்றனர், அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி வருகிறது. இந்த நிலையில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே உலக அளவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இந்தியா முதன்மையான நாடாக விளங்க வேண்டும்
என்ற நோக்கத்துடன் இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சியை வழங்க வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்பை சேர்ந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பயிற்சியை பெறுவதற்கான நபர்களை தேர்வு செய்வதற்காக ரேவதி மெடிக்கல் சென்டருடன் இணைந்து மாரத்தான் போட்டியும் இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான திருப்பூரில் உள்ள எஸ் இந்தியா கேன் அமைப்பு அலுவலகத்தில் செதியாளர் சந்திப்புகூட்டம் நடைபெற்றது. இதில் வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜி.எஸ்.பி.டேவிட், ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, எஸ் இந்தியா கேன் அமைப்பில் உள்ள முன்னாள் ஆசிய தடகள வீரர் சார்லஸ் பொரோமியோ, முன்னாள் சர்வதேச உயரம் தாண்டுதல் வீரர் நல்லசாமி அன்னாவி, முன்னாள் சர்வதேச டிரிபிள் ஜம்ப் வீரர் நிஜாமுதீன், தகவல் மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசகர் வசந்த் டேவிஸ், திருப்பூர் பயிற்சியாளர் அழகேசன், ஆண்டன் கிளாத்திங் முதன்மை செயல் அலுவலர் விஜய், ஆர்.கே. குழுமத்தின் நிர்வாக பங்குதாரர் நிவேதா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !